Posts

Showing posts from August, 2025

கனக பாரதி செந்தூரன்

Image
2025 ஆம் ஆண்டு ஆவணி 23ஆம் நாள் கிளிநொச்சி நகரின் திறன் விருத்தி மண்டபத்தில் தமிழாசிரியரும் எழுத்தாளரும் ஆகிய கனக பாரதி செந்தூரனின் 'அப்பாவின் நிலம் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் பழநிபாரதியின் பின்னட்டைக் குறிப்பு வாழ்துகளோடு மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பு நூலாக இந்நூல் வெளியாகி எல்லோரிடத்திலும் கவனம் ஈர்த்திருக்கின்றது. அடி ஆன்ம அழுகை கெற்றப்போல் நெல்லிக்கனி ஜெபம் நத்தை வயிறு கிருமி சகமார்க்கம் யாரொடு நோகேன் பயணம் விஜயதசமி இன்னும் இன்னும் எத்தனையோ? எனும் 12 சிறுகதைகளுடன் வெளியாகியுள்ளது. கனக பாரதி செந்தூரன் ஏற்கனவே 2019ஆம் ஆண்டில் 'மனப்பாரம்' எனும் சிறுகதைத் தொகுப்பு நூலை எழுதி வெளியிட்டுக் கவனத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆன்ம அழுகை இலங்கையின் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் அரச ஊழியர்களுக்கான அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பாடலாக்கப் போட்டியிலும் கடந்த 2024ஆம் ஆண்டு தேசிய ரீதியில் ஆறுதல் பரிசைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.